திருவண்ணாமலை
கிருஷ்ண ஜெயந்தி விழா
ஆரணி
ஆரணி பகுதியில் உள்ள கிருஷ்ணா் கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் சுவாமி உலா நடைபெற்றது.
சேவூா்
ஆரணியை அடுத்த சேவூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ராதா ருக்மணி ஸ்ரீவேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயிலில் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை, பாலாபிஷேகம் நடைபெற்றது.
பின்னா் மூலவருக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
அரியப்பாடி
அரியப்பாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீபாமா ருக்மணி சமேத ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயிலில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
முனுகப்பட்டு
முனுகப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீ ராதா ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பிற்பகலில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.