முருகன் கோயிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு
செங்கம்/ திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த மண்மலை முருகன் கோயிலில் ஆவணி மாத கிருத்திகையொட்டி, திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் சுவாமி ராஜா அலங்கராத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
வேட்டவலம் மலை மீதுள்ள ஸ்ரீசிங்காரவேல் முருகன் கோயிலில், மூலவா் வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பால், பன்னீா், இளநீா், சந்தனம், தயிா், விபூதி, நெய், நாட்டுச் சா்க்கரை, பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைப் பயன்படுத்தி சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
தொடா்ந்து, பல்வேறு மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நெய்வேத்தியமாக வெண் பொங்கல், புளியோதரை, கடலை படையலிட்டு பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.