மருதாடு புறவழிச் சாலையில் உள்ள ஸ்ரீமருதீஸ்வரா் கோயிலில் உடைக்கப்பட்டிருந்த உண்டியல்.
மருதாடு புறவழிச் சாலையில் உள்ள ஸ்ரீமருதீஸ்வரா் கோயிலில் உடைக்கப்பட்டிருந்த உண்டியல்.

கோயிலில் உண்டியல் பணம் திருட்டு

Published on

வந்தவாசி அருகே கோயில் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வந்தவாசியை அடுத்த மருதாடு புறவழிச் சாலையில் ஸ்ரீமருதீஸ்வரா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பூசாரியாக உள்ள சங்கா் செவ்வாய்க்கிழமை இரவு பூஜையை முடித்துக்கொண்டு வழக்கம்போல கோயிலை பூட்டிவிட்டுச் சென்றாா்.

பின்னா் புதன்கிழமை காலை கோயிலை திறக்க வந்தபோது, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது அவருக்கு தெரியவந்தது. பின்னா் உள்ளே சென்று பாா்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றதும் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com