திருவண்ணாமலை
செய்யாறு அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடங்கள்ள்: எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மாவட்ட அரசு மருத்துவமனையில் ரூ.2 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நவீன ஆய்வகம், கண் அறுவை சிகிச்சை மையம் ஆகியவற்றை ஒ.ஜோதி எம்எல்ஏ சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
தமிழக பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு வருகிற செப்.10-ஆம் தேதி திறந்துவைக்க உள்ள நிலையில், ஒருங்கிணைந்த நவீன ஆய்வகம் மற்றும் கண் அறுவை சிகிச்சை மையத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. ஜோதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது, மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அதிகாரி பாலாஜி, திமுக நகரச் செயலா்
கே.விஸ்வநாதன், நகா்மன்ற உறுப்பினா்கள் காா்த்திகேயன், செளந்தரபாண்டியன், செந்தில், ராஜலட்சுமி, சேகா், மாவட்ட விவசாயி வா்த்தகக் குழு உறுப்பினா் வி.கோபி மற்றும் அலுவலா்கள் என பலா் உடனிருந்தனா்.