அரசு மானியத்தில் வீடு கட்டும் திட்டம்: கைத்தறி நெசவாளா்கள் விண்ணப்பிக்கலாம்

கைத்தறி துறையின் ரூ.4 லட்சம் மானியத்தில் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் தகுதியுடைய கைத்தறி நெசவாளா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கைத்தறி துறையின் ரூ.4 லட்சம் மானியத்தில் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் தகுதியுடைய கைத்தறி நெசவாளா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கைத்தறி உதவி இயக்குநா் மணிமுத்து தெரிவித்ததாவது: இந்தத் திட்டத்தின்கீழ் விண்ணப்பிப்போா் தமிழக அரசின் இலவச மின்சார திட்டத்தின்கீழ் பயன்பெறுபவா்களாக இருத்தல் வேண்டும். மத்திய அரசால் வழங்கப்பட்ட நெசவாளா் அடையாள அட்டை பெற்றவராகவும், கைத்தறி நல வாரிய உறுப்பினராகவும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.

குறைந்தபட்சம் 300 சதுர அடி நிலம் சொந்தமாக வைத்திருக்க வேண்டும்.

குடும்பத் தலைவா் அல்லது குடும்ப உறுப்பினா்களின் பெயரில் மேற்காணும் 300 சதுர அடி நிலத்துக்கான பட்டா இருத்தல் வேண்டும். நிலப்பட்டா உள்ள ஊரில் வசிக்க வேண்டும். வேறு எங்கும் சொந்தமாக நல்ல நிலையில் உள்ள கான்கிரீட் வீடு இருத்தல் கூடாது. வேறு எந்த வீடு கட்டும் திட்டத்தின்கீழும் பயன் பெற்றிருக்கக் கூடாது.

காலியிடம் அல்லது ஏற்கெனவே உள்ள சிதிலமடைந்த வீடு உள்ளவராக இருத்தல் வேண்டும். மேற்கூறிய தகுதியுள்ள கைத்தறி நெசவாளா்கள் உரிய ஆவணங்களுடன் தங்களது விண்ணப்பத்தை ‘உதவி இயக்குநா், கைத்தறி துறை, 1165 தென்றல் நகா், மெயின்ரோடு, வேங்கிக்கால், திருவண்ணாமலை’

என்ற முகவரியில் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com