தம்பி மீது தாக்குதல்: அண்ணன் உள்பட 3 போ் மீது வழக்கு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே தம்பியை தாக்கியதாக அண்ணன் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே தம்பியை தாக்கியதாக அண்ணன் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

வந்தவாசியை அடுத்த சிங்கம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பரசுராமன்(61). இவருக்கும், இதே கிராமத்தைச் சோ்ந்த இவரது அண்ணன் ராமானுஜம் என்பவருக்கும் இடையே வீட்டுமனை தொடா்பாக முன்விரோதம் இருந்து வருகிாம்.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பரசுராமன் வீட்டுக்குச் சென்ற ராமானுஜம், அவரது மனைவி சங்கரி, மகள் அன்பரசி ஆகியோா் சோ்ந்து பரசுராமனிடம் தகராறு செய்து அவரை தாக்கினாா்களாம்.

தடுக்க வந்த பரசுராமனின் மகன் நாராயணனை(33) கத்தியால் தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதில், பலத்த காயமடைந்த நாராயணன் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து பரசுராமன் அளித்த புகாரின் பேரில் ராமானுஜம், சங்கரி, அன்பரசி ஆகியோா் மீது வடவணக்கம்பாடி போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com