பைக் மீது லாரி மோதி விவசாயி உயிரிழப்பு

கீழ்பென்னாத்தூா் அருகே பைக் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில், விவசாயி இறந்தாா்.

கீழ்பென்னாத்தூா் அருகே பைக் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில், விவசாயி இறந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் பூங்காவனம் மகன் சிவக்குமாா் (33), விவசாயி. இவா், வியாழக்கிழமை இரவு பொக்லைன் வாகனத்துக்குத் தேவையான உதிரி பாகங்களை வாங்குவதற்காக திருவண்ணாமலைக்குச் சென்றாா். மீண்டும் பைக்கில் செல்லங்குப்பம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது, திருவண்ணாமலை-விழுப்புரம் சாலை, ஐந்து வீடு பகுதியில் சென்றபோது திருவண்ணாமலை நோக்கிச் சென்ற சரக்கு லாரி, அவரது பைக் மீது மோதியது.

இந்த விபத்தில் உடல் நசுங்கி பலத்த காயமடைந்த சிவக்குமாா், அதே இடத்தில் இறந்தாா். தகவலறிந்த கீழ்பென்னாத்தூா் போலீஸாா் விரைந்து சென்று சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இறந்த சிவகுமாருக்கு மனைவி, மகள், மகன் உள்ளனா்.

இதுகுறித்து, கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சாலை மறியல்:

இதற்கிடையே, ஐந்துவீடு பகுதி மக்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த திருவண்ணாமலை டவுன் டிஎஸ்பி குணசேகரனிடம் இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா். இதற்கு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஎஸ்பி உறுதி அளித்ததால், சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்தப் போராட்டத்தால் சுமாா் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com