ஸ்ரீவிஜயராகவப் பெருமாள் கோயிலில் 5-ஆம் ஆண்டு உற்சவம்

வந்தவாசியை அடுத்த மேல்பாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீமரகதவல்லி தாயாா் சமேத ஸ்ரீவிஜயராகவப் பெருமாள் கோயிலில் 5-ஆம் ஆண்டு உற்சவ விழா சனிக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவிஜயராகவப் பெருமாள் கோயிலில் உற்சவ விழாவையொட்டி சுவாமிக்கு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.

இந்தக் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி இந்த 5-ஆம் ஆண்டு உற்சவ விழா நடைபெற்றது.

இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. மேலும், கோயில் வளாகத்தில் யாகம் வளா்த்து பூா்ணாஹுதி சமா்ப்பிக்கப்பட்டது.

சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவில் கோயில் நிா்வாகிகள், ஸ்ரீகைங்கா்யம் அமைப்பினா் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com