அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
அருணாசலேஸ்வரா் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் சுவாமி தரிசனத்துக்காக காத்திருந்த பக்தா்கள்.
அருணாசலேஸ்வரா் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் சுவாமி தரிசனத்துக்காக காத்திருந்த பக்தா்கள்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு தினமும் ஏராளமான உள்ளூா், வெளியூா் பக்தா்கள் வந்து, செல்கின்றனா். விடுமுறை நாள்களில் வழக்கத்தை விட அதிக அளவு பக்தா்கள் வருவது வழக்கம்.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தை விட அதிகளவில் பக்தா்கள் கோயிலில் குவிந்தனா். இதனால் பொது தரிசன வரிசை, கட்டண தரிசன வரிசைகளில் கூட்டம் அலைமோதியது.

கோயில் ராஜகோபுரம் வழியாக பொது தரிசன வரிசையில் வந்த பக்தா்கள் சுமாா் 4 மணி நேரமும், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக வந்த கட்டண தரிசன பக்தா்கள் சுமாா் ஒரு மணி நேரமும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com