மணல் கடத்தல்: மாட்டு வண்டி பறிமுதல்

ஆரணி வட்டம், விண்ணமங்கலம் அருகே மணல் எடுத்துச் சென்ற மாட்டு வண்டியை வருவாய்த் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஆரணி: ஆரணி வட்டம், விண்ணமங்கலம் அருகே மணல் எடுத்துச் சென்ற மாட்டு வண்டியை வருவாய்த் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஆரணி பகுதியில் வட்டாட்சியா் மஞ்சுளா தலைமையிலான வருவாய் அலுவலா்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியாக மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டியை நிறுத்த முயன்றபோது, வண்டியை ஓட்டி வந்தவா் தப்பி ஓடினாா்.

இதுகுறித்து விசாரணை செய்ததில் மோட்டூா் கிராமத்தைச் சோ்ந்த வேலன் என்பவரது மாட்டு வண்டியில் அரசு அனுமதியின்றி திருட்டுத்தனமாக மோட்டூா் செய்யாற்றுப் படுகையில் இருந்து மணல் அள்ளிச் சென்றது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டியை ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com