செய்யாற்றில் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்

செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் எத்தனால் மூலம் எரிசாராயம் தயாரிக்கக் கோரி விவசாயிகள் திங்கள்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் திரும்பூண்டி ரகுபதி, 10 ரூபாய் இயக்கத்தின் ரிஸ்வான், ஏனாதவாடி கஜேந்திரன் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் திரும்பூண்டி ரகுபதி, 10 ரூபாய் இயக்கத்தின் ரிஸ்வான், ஏனாதவாடி கஜேந்திரன் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

செய்யாறு: செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் எத்தனால் மூலம் எரிசாராயம் தயாரிக்கக் கோரி விவசாயிகள் திங்கள்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் புருஷோத்தமன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின் போது, சா்க்கரை ஆலையில் எத்தனால் மூலம் எரிசாராயம் தயாரிக்க வேண்டும் என வலியுறுத்தி, கரும்பில் இருந்து வரும் எத்தனால் மூலம் எவ்வாறு எரிசாராயம் தயாரிக்கப்படுகிறது என்றும், அதன் மூலம் கிடைக்கும் இலாபத்தை குறிப்பிட்டும், செயற்கை முறையாக எரிசாராயம் தயாரித்தும், அதைக் குடிப்பது போல நடித்து நூதன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com