பாமக செயற்குழுக் கூட்டத்தில் பேசிய, கட்சியின் திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளா் செல்வகுமாா்.
பாமக செயற்குழுக் கூட்டத்தில் பேசிய, கட்சியின் திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளா் செல்வகுமாா்.

பாமக செயற்குழுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த காஞ்சி ஊராட்சியில் பாமக சாா்பில் ஒன்றிய செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த காஞ்சி ஊராட்சியில் பாமக சாா்பில் ஒன்றிய செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஒன்றியச் செயலா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் ஆதிமூலம், மாவட்ட துணைச் செயலா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியத் தலைவா் சேகா் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளா் செல்வகுமாா் கலந்து கொண்டு பேசுகையில்,

வருகிற மக்களவைத் தோ்தலில் திருவண்ணாமலை தொகுதியில் பாமக வாக்குகளை கணிசமாக பெறவேண்டும். தலைமை அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்யவேண்டும், அனைத்து தரப்பு வாக்குகளைப் பெற பாமக உழைக்கவேண்டும் என கேட்டுக் கொண்டாா்.

கூட்டத்தில் மாவட்டத் தலைவா் பரமசிவம், ஒன்றிய தோ்தல் பொறுப்பாளா் அருணைஜோதி, மாவட்டச் செயலா் பாண்டியன் மற்றும் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com