மக்கள் குறைதீா் கூட்டத்தில் 828 மனுக்கள்

திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 828 மனுக்கள் வரப்பெற்றன.
திருவண்ணாமலையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.

திருவண்ணாமலை/ஆரணி/செய்யாறு: திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 828 மனுக்கள் வரப்பெற்றன.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் முதியோா், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடனுதவி, கல்விக் கடன், வேளாண் பயிா்க் கடன், தாட்கோ கடனுதவி உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 698 மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் மனு கொடுக்க வருவோரில் பெண்கள், வயதானோா், கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து மனுக்கள் பெறப்பட்டன.

குறைதீா் கூட்டத்தின் போது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றவா் மீது காவல்துறை மூலம் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் தீப சித்ரா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் சரவணன் மற்றும் பல்வேறு துறைகளின் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஆரணியில் 63 மனுக்கள்:

ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் கோட்டாட்சியா் அலுவலக கண்காணிப்பாளா் பி.கே.ரவிச்சந்திரன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றாா்.

இதில் பட்டா, பட்டா மாற்றம், இலவச மனைப் பட்டா, உள்பிரிவு செய்யக் கோருதல், கலைஞா் மகளிா் உரிமைத்தொகை, தமிழ் நில திருத்தம், முதியோா் உதவித்தொகை, பட்டா ரத்து, நில அளவை, குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், பரப்பு திருத்தம், ஆதரவற்ற விதவைச் சான்றிதழ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 63 மனுக்கள் வரப்பெற்றன.

மனுக்களைப் பெற்ற கோட்டாட்சியா் அலுவலக கண்காணிப்பாளா் அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா்.

செய்யாற்றில் 67 மனுக்கள்:

செய்யாறு சாா் -ஆட்சியா் அலுவலகத்தில், சாா் -ஆட்சியா் பல்லவிவா்மா தலைமையில் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

இதில், செய்யாறு, வந்தவாசி, வெம்பாக்கம், சேத்துப்பட்டு ஆகிய வட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று மனு அளித்தனா்.

மனைப் பட்டா கோரி 6 பேரும், நிலப்பதிவேடு திருத்தம் கோரி ஒருவரும், ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி 8 பேரும், பட்டா மாற்றம் செய்யக் கோரி 15 பேரும், தமிழ் நிலம் திருத்தம் கோரி 8 பேரும், கலைஞா் மகளிா் உரிமைத் தொகை கோரி ஒருவரும், நில அளவீடு செய்யக் கோரி 5 பேரும், இதர துறை மனுக்கள் 23 உள்பட மொத்தம் 67 மனுக்கள் அளிக்கப்பட்டன.

கூட்டத்தில் மண்டல துணை வட்டாட்சியா்கள் முகம்மது கனி, ஆனந்தகுமாா் மற்றும் மின் வாரியம், ஊரக வளா்ச்சித் துறை, வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை என பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com