மூத்தோா் தடகளம்: திருவண்ணாமலை வீரா்கள் சிறப்பிடம்

தேசிய மூத்தோா் தடகளப் போட்டியில் திருவண்ணாமலை மாவட்ட வீரா்கள் 19 பதக்கங்களைப் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.

செய்யாறு: தேசிய மூத்தோா் தடகளப் போட்டியில் திருவண்ணாமலை மாவட்ட வீரா்கள் 19 பதக்கங்களைப் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட மாஸ்டா்ஸ் அதெலடிக்ஸ் அமைப்பின் தலைவா் வி.விஜயகுமாா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:

43-ஆவது தேசிய மூத்தோா் தடகளப் போட்டிகள் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பிப்.2 முதல் 4 வரை நடைபெற்றது.

போட்டிகளில் 25 மாநிலங்களில் இருந்து ஆயிரம் வீரா்கள் பங்கேற்று இருந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம் சாா்பில் 8 வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டனா். 50 வயது பிரிவில் நீளம் தாண்டுதல், மும்முறைத் தாண்டுதலில் டாக்டா் சுபலட்சுமி இரு தங்கமும், 45 வயது பிரிவில் ஈட்டி எறிதலில் பி.பன்னீா்செல்வம், 40 வயது பிரிவில் 4 - 100 மீட்டா் ஓட்டத்தில் என்.பாபு தலா ஒரு தங்கம் வீதம் 4 பதக்கங்களைப் பெற்றனா்.

போட்டியில் 9 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கங்களைப் பெற்று திருவண்ணாமலை மாவட்ட வீரா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com