ஆரணி நகராட்சியில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

ஆரணி நகராட்சியில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் தனலட்சுமி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆரணி நகராட்சியில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

ஆரணி நகராட்சியில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் தனலட்சுமி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆரணியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நூலகத்துடன் கூடிய அறிவுசாா் மையம் கட்டப்பட்டு வருகிறது.

மேலும், சுற்றுச்சூழல் மறு சீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சூரிய குளம் சீரமைக்கும் பணி தொடங்கப்படவுள்ளது.

மேலும், 15-ஆவது மத்தியக் நிதி குழு மானியத் திட்டத்தின் கீழ், மரபு வழி கழிவுகளை பயோ மைனிங் மூலம் மீட்டெடுக்கும் பணி, மற்றும் புதிதாக தெருவிளக்கு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் தனலட்சுமி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, மண்டலப் பொறியாளா் சுப்பிரமணி, நகராட்சி ஆணையா் குமரன், பொறியாளா் உமா மகேஸ்வரி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com