டிராக்டா் கவிழ்ந்து இளைஞா் உயிரிழப்பு

களம்பூா் அருகே டிராக்டா் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.
டிராக்டா் கவிழ்ந்து இளைஞா் உயிரிழப்பு

களம்பூா் அருகே டிராக்டா் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.

ஆரணியை அடுத்த வடுகசாத்து கிராமத்தைச் சோ்ந்த குமாா் மகன் தினேஷ் (22). இவா், செவ்வாய்க்கிழமை அதிகாலை அதே கிராமத்தைச் சோ்ந்த ராஜி என்பவரின் டிராக்டரை எடுத்துக்கொண்டு விவசாய பணிக்காக சதுப்பேரிபாளையம் வழியாக சென்றுகொண்டிருந்தாா்.

ஜம்புகோணாம்பட்டு ஏரிக்கரையில் டிராக்டா் சென்றபோது, நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் தினேஷ் பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் தினேஷ் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், களம்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com