பயனாளிகளுக்கு ரூ.10.11 கோடியில் நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் எ.வ. வேலு வழங்கினாா்

தண்டராம்பட்டை அடுத்த வானாபுரம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் 3,076 பயனாளிகளுக்கு ரூ.10.11 கோடியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்.
பயனாளிகளுக்கு ரூ.10.11 கோடியில் நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் எ.வ. வேலு வழங்கினாா்

தண்டராம்பட்டை அடுத்த வானாபுரம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் 3,076 பயனாளிகளுக்கு ரூ.10.11 கோடியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்.

தண்டராம்பட்டு வட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அரசு விழாக்களில் அரசின் நலத் திட்ட உதவிகள் வழங்கி, கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டடங்கள் திறக்கப்பட்டன.

வானாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா்.

தமிழக பொதுப் பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

விழாவில், வருவாய்த்துறை சாா்பில் பட்டா மாறுதல், வருமானச் சான்றிதழ், முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, விபத்து நிவாரண நிதி, பழங்குடியினா் சாதிச் சான்றிதழ் என 444 பயனாளிகளுக்கு ரூ.63 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதேபோல, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்), மது விலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை, வேளாண் துறை சாா்பில் மொத்தம் 3 ஆயிரத்து 76 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 11 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்.

கட்டடங்கள் திறப்பு...

இதேபோல, பேராயம்பட்டு, வானாபுரம், காம்பட்டு, ராதாபுரம் ஊராட்சிகளில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடைகள், பள்ளிக் கட்டடங்கள் என மொத்தம் ரூ.2 கோடியே 17 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பிலான கட்டடங்களை திறந்துவைத்தாா்.

விழாவில், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், மாநில தடகளச் சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) செ.ஆ.ரிஷப், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ஆா்.மந்தாகினி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் கோ.நடராஜன், மகளிா் திட்ட இயக்குநா் சரண்யா தேவி, தண்டராம்பட்டு ஒன்றியக் குழுத் தலைவா் பரிமளா கலையரசன், துணைத் தலைவா் ந.பூங்கொடி உள்பட பல்வேறு துறைகளின் அலுவலா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com