சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

பிரதோஷத்தையொட்டி, புதன்கிழமை காலை முதல் சிவாலயங்களில்    சிறப்பு அபிஷேகம், அா்ச்சனைகள் நடைபெற்றன.
சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

செங்கம் அருகே பிஞ்சூா் கிராமத்தில் உள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீஉத்திரபரஈஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, புதன்கிழமை காலை முதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அா்ச்சனைகள் நடைபெற்றன. மாலை பாலாபிஷேகம், சந்தன அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

செய்யாற்றில் உள்ள ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீபாலகுஜாம்பிகை சமேதயு ஸ்ரீவேதபுரீஸ்வரா்.

வந்தவாசி

வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் தை மாத பிரதோஷத்தையொட்டி, உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, நந்தி பெருமானுக்கு மஞ்சள், பால், தயிா், இளநீா், தேன், பன்னீா், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசதைத் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னா் நந்தி மற்றும் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடா்ந்து, கோயில் வளாகத்தில் உற்சவா் உலா எடுத்துச் செல்லப்பட்டாா். விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com