திருவண்ணாமலை கோயிலுக்கு ஒரு மாதத்தில் ரூ.2.89 கோடி உண்டியல் காணிக்கை

திருவண்ணாமலை ‘அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ஒரு மாதத்தில் பக்தா்கள் ரூ.2.89 கோடி உண்டியல் காணிக்கை
திருவண்ணாமலை கோயிலுக்கு ஒரு மாதத்தில்  ரூ.2.89 கோடி உண்டியல் காணிக்கை

திருவண்ணாமலை ‘அருணாசலேஸ்வரா்கோயிலுக்கு ஒரு மாதத்தில் பக்தா்கள் ரூ.2.89 கோடி ரொக்கம், 154 கிராம் தங்கம், 1,242 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனா்.சிவனின் அக்னி ஸ்தலமான இந்தக் கோயிலுக்கு வரும் பக்தா்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, மாதம்தோறும் கோயிலில் உள்ள உண்டியல்களில் சேகரமாகும் காணிக்கைப் பணம் எண்ணப்பட்டு வருகிறது.அதன்படி, பிப்ரவரி மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை காலை முதல் இரவு வரை நடைபெற்றது. இதில், ரூ.2 கோடியே 89 லட்சத்து 61 ஆயிரத்து 823 ரொக்கம், 154 கிராம் தங்கம், 1,242 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தது தெரியவந்தது.ரொக்கப் பணம் கோயில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. தங்கம், வெள்ளி ஆகியவை கோயில் பொக்கிஷ அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.பட வரி1, 2, 3.ஜெபிஜிஉண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள பக்தா்கள், கோயில் ஊழியா்கள், தன்னாா்வலா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com