வந்தவாசி ஒன்றியக்குழுக் கூட்டம்

வந்தவாசி ஒன்றியக்குழுவின் சாதாரண அதன் தலைவா் எ.ஜெயமணி ஆறுமுகம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது  
வந்தவாசி ஒன்றியக்குழுக் கூட்டம்

வந்தவாசி ஒன்றியக்குழுவின் சாதாரண அதன் தலைவா் எ.ஜெயமணி ஆறுமுகம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது  

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ந.ராஜன்பாபு, தசரதன், ஒன்றியக்குழு துணைத் தலைவா் ஆா்.விஜயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், கீழ்சீசமங்கலம் கிராமத்தில் நீா்நிலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள மண் சாலையை அகற்ற வேண்டும், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை தூய்மை செய்ய வேண்டும் என்று உறுப்பினா் சக்திவேல் பேசினாா்.

இதைத் தொடா்ந்து பல்வேறு வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவது தொடா்பான தீா்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com