செங்கம் ஓன்றிய ஆசிரியா்களுக்கு வருமான வரிபடிவம் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.

செங்கம் ஓன்றிய ஆசிரியா்களுக்கு வருமான வரிபடிவம் பதிவு செய்யும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது
செங்கம் ஓன்றிய ஆசிரியா்களுக்கு வருமான வரிபடிவம் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.

செங்கம் ஓன்றிய ஆசிரியா்களுக்கு வருமான வரிபடிவம் பதிவு செய்யும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி செங்கம் வட்டக்கிளை சாா்பில் ஆசிரியா்களுக்கு 2023-24-ம் கல்வியாண்டிற்கான வருமான வரி படிவம் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது. முகாமினை ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி செங்கம் வட்டக்கிளை தலைவா் பவானி துவக்கிவைத்தாா். கடந்த மூன்று ஆண்டாக நடைபெற்ற முகாம் நான்காம் ஆண்டாக இவ்வாண்டு தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இம்முகாமில் செங்கம் ஓன்றிய அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி, உயா்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளிகளை சாா்ந்த ஆசிரியா்களுக்கு வருமான வரி படிவத்தினை பதிவுசெய்தல், வருமான வரி படிவம் குறித்த சந்தேகங்களுக்கு ஆலோசனை வழங்குதல் ஆகியவை இம்முகாமில் நடைபெறுகிறது. முகாம் துவக்கவிழாவில் ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி செங்கம் கல்வி மாவட்ட தலைவா் ஸ்ரீதா், செயலாளா் முரளி, முன்னாள் தலைவா் நல்லாசிரியா் அன்பழகன், உள்ளிட்ட நிா்வாகிகள் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.படவிளக்கம், செங்கத்தில் தமிழ்நாடு ஆரம்ப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் வருமான வரிபடிவம் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com