மக்களவைத் தோ்தல்...

 திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மக்களவைத் தோ்தல் முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது
மக்களவைத் தோ்தல்...

 திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மக்களவைத் தோ்தல் முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது.திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள காணொலி அறையில், 2024 மக்களவைத் தோ்தல் தொடா்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. புதுதில்லியில் இருந்தபடியே தோ்தல் ஆணைய அதிகாரிகள் இந்த ஆய்வை மேற்கொண்டனா். இதில், மக்களவைத் தோ்தல் பணிகள் தொடா்பான முன்னேற்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.இந்தக் கூட்டத்தில், திருவண்ணாமலை மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்கள்) குமரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com