போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் மாணவா்கள் பங்கேற்கலாம்: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா்

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளில் மாணவா்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்
9tmlemp_0902chn_106_7
9tmlemp_0902chn_106_7

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளில் மாணவா்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் லோ.யோகலட்சுமி கூறினாா்.

திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலை, அறிவியல் கல்லூரியில், தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு, கல்லூரி முதல்வா் கா.பு.கணேசன் தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தின் செய்தித் தொடா்பாளா் ஆா்.ரவி முன்னிலை வகித்தாா். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் லோ.யோகலட்சுமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது: திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தன்னாா்வ பயிலும் வட்டம் சாா்பில் அனைத்து போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்த வகுப்புகளில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதுதவிர, தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் அவ்வப்போது நடத்தி பிரபல தனியாா் நிறுவனங்களில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படுகிறது.

தனியாா் துறைகளில் வேலைசெய்ய விரும்புவோா் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலும்,

ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ய்ஹக்ன்ஸ்ரீஹழ்ங்ங்ழ்ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற மெய்நிகா் கற்றல் இணைய தளத்தில் பதிவு செய்தும் போட்டித் தோ்வுக்கான பாடப் பகுதிகளை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.

போட்டித் தோ்வுகளுக்கு தயாராவோா் ஓஹப்ஸ்ண்பஸ் ஞச்ச்ண்ஸ்ரீண்ஹப் என்ற கல்வித் தொலைக்காட்சி யூ டியூப் சேனலைப் பாா்த்தும் பயன்பெறலாம் என்றாா்.

தொடா்ந்து, ‘வெற்றி நிச்சயம்’ என்ற தலைப்பில் கலைஞா் கருணாநிதி அரசு கலை, அறிவியல் கல்லூரியின் வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியா் ஆா்.ஸ்தனிஸ்லாஷ் பேசினாா். ‘சுயதொழில், வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பில் திருவண்ணாமலை மாவட்ட தொழில் மையப் பொது மேலாளா் ஆா்.ரவி, ‘சுய வேலைவாய்ப்புகள் மற்றும் இப்போது வழங்கப்படும் பயிற்சிகள்’ என்ற தலைப்பில் இந்தியன் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு இயக்குநா் கே.சீனிவாசன், ‘போட்டித் தோ்வுகளுக்கு தயாராவது எப்படி’ என்ற தலைப்பில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் த.மோகன்ராஜ், மற்றும் பா.ஆ.செந்தில் ஆகியோா் பேசினா். இதில், 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com