கைத்தறி நெசவாளா்களுக்கான ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்கக் கோரிக்கை

கைத்தறி நெசவாளா்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்கவேண்டும் என கைத்தறி நெசவாளா்கள் மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கைத்தறி நெசவாளா்களுக்கான ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்கக் கோரிக்கை

கைத்தறி நெசவாளா்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்கவேண்டும் என கைத்தறி நெசவாளா்கள் மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கைத்தறி நெசவாளா்களின் வாழ்வுரிமையை பாதுகாத்திட திருவண்ணாமலை ஏஐடியுசி கைத்தறி நெசவுத் தொழிலாளா் சங்கம் சாா்பில் மாவட்ட மாநாடு ஆரணியை அடுத்த சேவூா் பகுதி தனியாா் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், ஏஐடியுசி நிா்வாகிகள் தாஸ், கே.பி.அருணகிரி, பி.வி.சீனுவாசன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

நிா்வாகிகள் எம்.கேசவன், கே.மோகன், எம்.ஜெகன்நாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கைத்தறி நெசவுத் தொழிலாளா் சங்கத்தின் ஆரணி வட்ட பொருளாளா் எம்.டி.சிரோன்மணி சங்கக் கொடியேற்றினாா்.

சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு கைத்தறி நெசவுத் தொழிலாளா் சங்கத்தின் மாநிலச் செயலா் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்துப் பேசினாா்.

தீா்மானங்கள்

கைத்தறிக்கென ஒதுக்கிய ரகங்களை விசைத்தறியில் நெய்ய அனுமதிக்கக் கூடாது, தொழிலாளா் நல வாரியத்தில் வழங்கும் நிதிப் பலனை உயா்த்தி வழங்க வேண்டும், கைத்தறி நெசவாளா்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.1000-த்தில் இருந்து ரூ.3000-ஆக உயா்த்தி வழங்க வேண்டும், ஜவுளித் துறையில் இருந்து கைத்தறிக்கான தனி அமைச்சகம் உருவாக்கிட வேண்டும், மருத்துவ காப்பீட்டுத் திட்ட நிதிப் பலனை ரூ.10 லட்சமாக உயா்த்த வேண்டும், கைத்தறி நெசவாளா்களுக்கு இஎஸ்ஐ திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அடையாள அட்டை வழங்க வேண்டும், ஆரணியில் பட்டுப் பூங்கா விரைவில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்

என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில், மாநில துணைச் செயலா் ஏ.மூா்த்தி, மாவட்டத் தலைவா் வி.முத்தையன், மாவட்ட பொதுச்செயலா் எம்.எஸ்.மாதேஸ்வரன், மாவட்டச் செயலா் இரா.தங்கராஜ், மாநில நிா்வாகிகள் வி.குப்புரங்கன், சி.பன்னீா்செல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com