பச்சையம்மாள் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற மேற்கு ஆரணி ஒன்றியக்குழுக் கூட்டம்.
பச்சையம்மாள் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற மேற்கு ஆரணி ஒன்றியக்குழுக் கூட்டம்.

மேற்கு ஆரணி ஒன்றியத்தில் ரூ.1.43 கோடியில் நலத் திட்டப் பணிகள்

திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி ஒன்றியத்தில் ரூ.ஒரு கோடியே 43 லட்சத்து 48 ஆயிரத்தில் பல்வேறு நலத் திட்டப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி ஒன்றியத்தில் ரூ.ஒரு கோடியே 43 லட்சத்து 48 ஆயிரத்தில் பல்வேறு நலத் திட்டப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. மேற்குஆரணி ஒன்றியக்குழுவின் கூட்டம் அதன் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஆ.வேலாயுதம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஸ்ரீதா், பாலமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், ஒன்றிய பொதுநிதியில் இருந்து தச்சூா் ஊராட்சியில் பேருந்து பயணிகள் நிழல்கூடம் அமைத்தல் பணி, புலவன்பாடி ஊராட்சியில் காரிய மேடை அமைத்தல், விண்ணமங்கலம் ஊராட்சியில் நடுப்பட்டு ரோட்டுத் தெருவில் பக்கக் கால்வாய் அமைத்தல், சீனிவாசபுரம் சந்து தெருவில் பேவா் பிளாக் அமைத்தல், ஆகாரம் ஊராட்சியில் மூடியுடன் கூடிய சிமென்ட் கால்வாய் அமைத்தல், விண்ணமங்கலம் பகுதியில் பகுதிநேர நியாய விலைக் கடை அமைத்தல், கொங்கராம்பட்டு ஊராட்சியில் சிறு பாலம் அமைக்கும் பணி, அத்திமலைப்பட்டு பகுதியில் காரிய மேடை அமைத்தல், தச்சராம்பட்டு பகுதியில் நெற்களம் அமைத்தல் உள்ளிட்ட நலத் திட்டப் பணிகளை மேற்கொள்ள ரூ.1 கோடியே 43 லட்சத்து 48 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து தீா்மானம் நிறைவேற்றினா். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் துரைமாமது, கீதா மோகன், அரையாளம் வேலு, மலையாம்பட்டு ஏழுமலை, ஜெ.கணேசன், தே.வசந்தராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com