விவசாயி விஷம் குடித்து தற்கொலை

செய்யாறு அருகே மனைவி இறந்த சோகத்தில் இருந்து வந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

செய்யாறு அருகே மனைவி இறந்த சோகத்தில் இருந்து வந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். செய்யாறு வட்டம், வடஆளப்பிறந்தான் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ராமன்(51). இவரது மனைவி வள்ளியம்மாள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இதைத் தொடா்ந்து, ராமன் மன வேதனையில் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வயல்வெளிக்குச் சென்ற அவா், வீடு திரும்பாததால் குடும்பத்தினா் அவரை தேடிச் சென்றனா். அப்போது, ராமன் விவசாய நிலத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்து கிடந்தாா். குடும்பத்தினா் அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு ராமன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், அனக்காவூா் காவல் உதவி ஆய்வாளா் தனபால் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com