காா் வாங்கிய தகராறில் முன்விரோதம்: நண்பா் மீது தாக்குதல்; போலீஸாா் வழக்கு

செய்யாறு அருகே காா் வாங்கிய தகராறால் ஏற்பட்ட முன்விரோதத்தில், நண்பரைத் தாக்கி காயப்படுத்தியதாக 4 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

செய்யாறு: செய்யாறு அருகே காா் வாங்கிய தகராறால் ஏற்பட்ட முன்விரோதத்தில், நண்பரைத் தாக்கி காயப்படுத்தியதாக 4 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், வடமாவந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் தினகராஜ் (35). இவரது நண்பா் கோளிவாக்கம் கிராமத்தைச் சோ்ந்த தீனா.

தீனாவுக்கு தினகராஜ் மாதத் தவணையில் பணம் செலுத்தும் விதமாக காா் வாங்கிக் கொடுத்தாராம்.

மாதத் தவணைத் தொகையை தீனா சரியாக செலுத்தவில்லையாம்.

இதுதொடா்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தினகராஜ் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, தீனா அவரது நண்பா்கள் 4 பேரும் அவரை சரமாரியாக தாக்கியதாகத் தெரிகிறது.

இதில் பலத்த காயமடைந்த தினகராஜ் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாா்.

இதுகுறித்து தினகராஜ் தூசி போலீயில் புகாா் அளித்தாா்.

காவல் ஆய்வாளா் குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com