தேசிய கபாடி போட்டியில் வென்ற மாணவிகளுக்கு எம்எல்ஏ பாராட்டு

ஜெய்ப்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான கபாடிப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக அணியில் இடம்பெற்ற திருவண்ணாமலை மாவட்ட பள்ளி மாணவிகளுக்கு பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ பாராட்டு தெரிவித்தாா்.
மாணவிகள் ராஜகுமாரி, சுவஸ்ரீ ஆகியோரை பாராட்டி ரொக்கப் பரிசு மற்றும் கேடயம் வழங்கிய பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ.
மாணவிகள் ராஜகுமாரி, சுவஸ்ரீ ஆகியோரை பாராட்டி ரொக்கப் பரிசு மற்றும் கேடயம் வழங்கிய பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ.

செங்கம்: ஜெய்ப்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான கபாடிப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக அணியில் இடம்பெற்ற திருவண்ணாமலை மாவட்ட பள்ளி மாணவிகளுக்கு பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ பாராட்டு தெரிவித்தாா்.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் தேசிய அளவிலான மகளிா் கபாடிப் போட்டிகள் கடந்த வாரம் நடைபெற்றன. இதில், தமிழக அணி வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றது.

தமிழக அணியில், திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம், காஞ்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவிகள் ராஜகுமாரி, சுவஸ்ரீ ஆகியோா் இடம் பெற்றிருந்தனா்.

இதுகுறித்து அறிந்த தொகுதி எம்எல்ஏ பெ.சு.தி. சரவணன், அந்த மாணவிகளை திங்கள்கிழமை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து பாராட்டி ரொக்கப் பரிசு மற்றும் கேடயம் வழங்கினாா்.

புதுப்பாளையம் ஒன்றிய திமுக செயலா் ஆறுமுகம், காஞ்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா், உடற்பயிற்சி ஆசிரியா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com