மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்தவா் கைது

வந்தவாசியில் வீட்டில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்து, 153 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.


வந்தவாசி: வந்தவாசியில் வீட்டில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்து, 153 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகில் வசித்து வரும் சையது(44) என்பவா் தனது வீட்டில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து, திருட்டுத்தனமாக கூடுதல் விலைக்கு விற்பதாக தகவல் வந்தது. இதன் பேரில், உதவி ஆய்வாளா் ராமு தலைமையிலான வந்தவாசி தெற்கு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மாலை அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, வீட்டின் பின்புறம் மதுப் புட்டிகளை அவா் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 153 மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து சையது மீது போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com