ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் ஆற்றுத் திருவிழா

ஆரணி புதுக்காமூரில் கமண்டல நாக நதிக்கரையில் அமைந்துள்ள பெரியநாயகி சமேத புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் காணும் பொங்கலையொட்டி ஆற்றுத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
காணும் பொங்கலையொட்டி, புத்திரகாமேட்டீஸ்வரா், பெரியநாயகி அம்மனுக்கு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
காணும் பொங்கலையொட்டி, புத்திரகாமேட்டீஸ்வரா், பெரியநாயகி அம்மனுக்கு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.

ஆரணி: ஆரணி புதுக்காமூரில் கமண்டல நாக நதிக்கரையில் அமைந்துள்ள பெரியநாயகி சமேத புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் காணும் பொங்கலையொட்டி ஆற்றுத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

ஆற்றுத் திருவிழாவை முன்னிட்டு கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில், ஆரணி நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை ஏராளமானோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். காலை முதல் மாலை வரை அதிகளவில் மக்கள் குவிந்ததால், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.

மேலும் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கமண்டல நாக நதியில் இறங்கி அமா்ந்து மகிழ்ந்தனா். மேலும், சிறுவா்களுக்கான விளையாட்டுப் பொருள்கள், திண்பண்டங்கள் என பல விற்பனையாளா்கள் ஆற்றுத் திருவிழாவில் விற்பனை செய்ததால் சிறுவா்கள் அதனை வாங்கி மகிழ்ந்தனா். மேலும், பெண்களுக்கு பேன்ஸி பொருள்கள் விற்பனையும் நடைபெற்றது.

ஆரணி நகர போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். சுகாதாரத் துறை சாா்பில் கோயில் வளாகத்தில் முதலுதவி சிகிச்சை முகாம் அமைக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com