சாத்தனூா் அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டத்தில் உள்ள சாத்தனூா் அணையில் காணும் பொங்கலையொட்டி, புதன்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து ஒரே நாளில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் குவிந்தனா்.


ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டத்தில் உள்ள சாத்தனூா் அணையில் காணும் பொங்கலையொட்டி, புதன்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து ஒரே நாளில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் குவிந்தனா்.

இந்த அணை சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இரவு நேரங்களில் வண்ண வண்ண மின் விளக்குகள் ஜொலிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

மேலும், அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதோடு முதலைப் பண்ணையும் அமைந்துள்ளது.

பொங்கல் பண்டிகை தொடா் விடுமுறையால் உள்ளூா் மற்றும் வெளியூா்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அணையில் அதிகளவில் குவிந்தனா்.

பயணிகள் வருகை வழக்கத்தைவிட அதிகமாக இருந்ததோடு, ஒரேநாளில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் குடும்பத்துடன் வருகை தந்து அணையின் சிறப்பம்சங்களை கண்டுகளித்தனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com