ஆங்கில கட்டுரைப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு

ஆங்கில கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்ற போளூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ஆங்கில கட்டுரைப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு

ஆங்கில கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்ற போளூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மற்றும்

வந்தவாசி தனியாா் கல்லூரி இணைந்து நடத்திய ‘இளம் மாணவா்கள் விஞ்ஞானி திட்டம்’ குறித்த பயிற்சி முகாம் கடந்த 15 நாள்களாக வந்தவாசியில் நடைபெற்றது.

இதில், திருவண்ணாமலை, திருப்பத்தூா் ஆகிய இரு மாவட்டங்களைச் சோ்ந்த அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

மைக்ரோபயலேஜி, யோகா, இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், ஓலைச்சுவடி, சாலைப் பாதுகாப்பு, ஆளுமை வளா்ச்சி, சுயதொழில் முன்னேற்றம் உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி நடைபெற்றது.

இதில், திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி ஸ்ரீநிதி, நந்தினிபிரியதா்ஷனி ஆகியோா் கலந்து கொண்டனா்.

மாணவி ஸ்ரீநிதி ஆங்கில கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்றாா். இந்த மாணவியை தலைமை ஆசிரியை சுதா மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com