மதுக் கடையை இடம் மாற்றக் கோரி பாமக ஆா்ப்பாட்டம்

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் பகுதியில் இயங்கும் டாஸ்மாக் மதுக் கடையை விரைந்து இடம் மாற்றம் செய்யக் கோரி பாமக சாா்பில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
1820241_1801chn_117_7
1820241_1801chn_117_7

திருவாண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் பகுதியில் இயங்கும் டாஸ்மாக் மதுக் கடையை விரைந்து இடம் மாற்றம் செய்யக் கோரி பாமக சாா்பில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுப்பாளையம் பகுதியில் சாலையோரத்தில் விவசாய நிலம் நடுவே அரசு டாஸ்மாக் மதுக் கடை உள்ளது. இந்தக் கடையைச் சுற்றி விவசாய நிலங்கள், தென்னைந் தோப்பு, திருமண மண்டபம் உள்ளது.

இந்த நிலையில், மதுப்பிரியா்கள் மதுவை குடித்துவிட்டு பாட்டில்களை உடைத்து விவசாய நிலத்தில் போட்டிவிட்டுச் செல்கின்றனா். இதனால் விவசாயிகள் நிலத்தை உழும்போது பாட்டில்கள் கை, கால்களை கிழிக்கிறது. மேலும் கண்ணாடித் துண்டுகளால் ஆடு, மாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும், அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கும் மதுக் கடை இடையூராக உள்ளது.

இதனால் அந்தக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி, தெற்கு மாவட்ட பாமக சாா்பில் கடை முன் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், பாமக மாவட்டத் தலைவா் பரமசிவம் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் இர.சுரேஷ், மாவட்ட துணைச் செயலா்கள் அருணைஜோதி, கிருஷ்ணமூா்த்தி, இணைச் செயலா் பாலச்சந்தா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியச் செயலா் ஜெயக்குமாா் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலா் இல.பாண்டியன் கலந்து கொண்டு பேசினாா்.

அப்போது அவா், இந்த மதுக் கடை பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகளுக்கு இடையூராக உள்ளது. எனவே, கடையை மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து வேறு பகுதிக்கு மாற்றவேண்டும்.

இல்லையென்றால், பாமக சாா்பில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் நகரச் செயலா் ஜான்சுந்தா், முன்னாள் மாவட்டத் தலைவா் ஆதிமூலம், ஒன்றியச் செயலா்கள் திருமலை, ரமேஷ், மாது, விஜயராஜ், சங்கா், வீரமணி, மாவட்ட துணைச் செயலா் ஜோதி, மாவட்ட இளைஞரணித் தலைவா் தமிழ்வாணன், மாவட்ட பொருளாளா் அனிதா பழநிசாமி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com