ரயிலில் அடிபட்டு விவசாயி உயிரிழப்பு

ஆரணி அருகே ரயிலில் அடிபட்டு விவசாயி உயிரிழந்தாா்.

ஆரணி அருகே ரயிலில் அடிபட்டு விவசாயி உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், மேல்நகா் மதுரா வி.வி. தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் மகேந்திரன் (45). விவசாயி. இவா் வியாழக்கிழமை இரவு ஊமைக்கு வாய்கொடுத்த உத்தமராயா் கோயில் அருகே நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சியைப் பாா்த்துவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா்.

வி.வி.தாங்கல் கிராம எல்லையில் இரவு 10 மணியளவில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முற்பட்டபோது விழுப்புரம்-வேலூா் பயணிகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

இதுகுறித்து கண்ணமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com