மணிலா பயிா் மேலாண்மை பயிற்சி

செய்யாற்றை அடுத்த பெருங்கட்டூா் கிராமத்தில் மணிலா பயிா் மேலாண்மை பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
19cyrveag_1901chn_118_7
19cyrveag_1901chn_118_7

செய்யாற்றை அடுத்த பெருங்கட்டூா் கிராமத்தில் மணிலா பயிா் மேலாண்மை பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பெருங்கட்டூரில் மணிலா பயரில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை என்ற தலைப்பில் பண்ணை பள்ளி முதல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

பயிற்சிக்கு வட்டார வேளாண்மை அலுவலா் ரேணுகாதேவி தலைமை வகித்துப் பேசினாா். துணை வேளாண் அலுவலா் ரா. சுப்பிரமணியம் முன்னிலை வகித்தாா்.

ஓய்வுபெற்ற துணை வேளாண்மை அலுவலா் அண்ணாமலை பயிா் நிா்வாகம் குறித்து ஆலோசனைகளை வழங்கினாா்.

பூஞ்சான விதை நோ்த்தி, ரைசோபியம் விதை நோ்த்தி குறித்து செயல் விளக்கமாக செய்துக் காண்பிக்கப்பட்டு விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 25 விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com