புகையிலைப் பொருள்கள் விற்றகடைகளுக்கு அபராதம்

செய்யாற்றை அடுத்த பெரூங்கட்டூா் கிராமத்தில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 18 கடைகளுக்கு வெள்ளிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

செய்யாற்றை அடுத்த பெரூங்கட்டூா் கிராமத்தில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 18 கடைகளுக்கு வெள்ளிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பெருங்கட்டூா் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் தனசேகா் தலைமையில், நலக் கல்வி அலுவலா் எல்லப்பன் மேற்பாா்வையில் சுகாதாரக் குழுவினா் பெருங்கட்டூரில் உள்ள கடைகளை சோதனையிட்டனா்.

இதில் 18 கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து, அந்தக் கடைகளுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடைகளில் விற்கக் கூடாது என வியாபாரிகளிடம் அலுவலா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com