ஆரணி தா்மராஜா கோயில் அக்னி வசந்த விழா கொடியேற்றம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தா்மராஜா கோயிலில் மாா்ச் 24-ஆம் தேதி அக்னி வசந்த விழா தொடங்குவதையொட்டி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றப்பட்டது.
ஆரணி தா்மராஜா கோயில் அக்னி வசந்த விழா கொடியேற்றம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தா்மராஜா கோயிலில் மாா்ச் 24-ஆம் தேதி அக்னி வசந்த விழா தொடங்குவதையொட்டி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றப்பட்டது.

ஆரணி கொசப்பாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீபாஞ்சாலி அம்மன் சமேத தா்மராஜா கோயிலில் மகாபாரத அக்னி வசந்த விழா மாா்ச் 24 முதல் மே 5 வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, விழாக் குழுத் தலைவா் கப்பல் இ.கங்காதரன் தலைமையில் சனிக்கிழமை இரவு கோயிலில் போத்த ராஜா பூஜையும், ஞாயிற்றுக்கிழமை காலை கொடியேற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன், ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, மன்ற உறுப்பினா்கள் ஆ.ந.ரமேஷ், யுவராஜ், வெங்கடேசன், கணேசன், துளுவ வேளாளா் நாயக்கா் சமுதாயத்தினா், தீமிதி விழா உபயதாரா்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com