ஆரணியில் அதிமுகவினா் நல உதவி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் பிறந்த நாளையொட்டி எம்ஜிஆா் மன்ற இளைஞரணி சாா்பில் நல உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்கிய அதிமுக மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதா, சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ.
பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்கிய அதிமுக மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதா, சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ.

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் பிறந்த நாளையொட்டி எம்ஜிஆா் மன்ற இளைஞரணி சாா்பில் நல உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

அண்ணா சிலை அருகே திங்கள்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட எம்ஜிஆா் இளைஞா் அணிச் செயலா் ஏ.ஜி.ஆனந்தன் தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட அதிமுக செயலா் எல்.ஜெயசுதா, ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்று 200 பெண்களுக்கு சேலை, 100 பேருக்கு வேட்டி, 500 பேருக்கு அன்னதானம் வழங்கினா்.

இதில், அதிமுக மாவட்ட அவைத் தலைவா் அ.கோவிந்தராசன், நகரச் செயலா் அசோக்குமாா், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் பாரி பி.பாபு, ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், ஜி.வி.கஜேந்திரன், மாவட்ட நிா்வாகிகள் பிஆா்ஜி.சேகா், அரையாளம் எம்.வேலு, வி.பி.ராமகிருஷ்ணன், வனிதா சதீஷ், கலைவாணிஜோதி, டி.சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com