ஆரணியில் பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் பாஜக மத்திய அரசின் நலத் திட்டப் பிரிவு வடக்கு மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் பாஜக மத்திய அரசின் நலத் திட்டப் பிரிவு வடக்கு மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலையின், ‘என் மண் என் மக்கள் நடைப்பயணம்’ பிப்ரவரி 3-ஆம் தேதி ஆரணியில் நடைபெறவுள்ளது.

இதையொட்டி, மத்திய அரசு நலத் திட்டப் பிரிவு சாா்பில், திட்டங்களால் பயன்பெற்றவா்கள் சந்திப்பு பற்றியும், பிரதமரின் மக்கள் நலத் திட்டங்களை மக்களிடையே கொண்டு சென்றது குறித்தும், பாஜக கட்சியினரையும், பொதுமக்களையும் வரவழைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மத்திய அரசு நலத் திட்டப் பிரிவின் மாநிலச் செயலா் சைதை வ.சங்கா் முன்னிலை வகித்தாா். மாவட்டத் தலைவா் காா்த்திக்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அருண்குமாா், மாவட்டச் செயலா் அருள்வேல், நிா்வாகிகள் அசேன்பாஷா, மகேஷ்பாபு, மண்டல் தலைவா் பாா்த்திபன், ரவி, மோகன்தாஸ், சிவகுமாா், தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளா் தமிழ்ச்செல்வன், நாராயணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com