கம்மவான்பேட்டை கிராமத்தில் 56 ஆம் ஆண்டு காளை விடும் திருவிழா

ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே கம்மவான்பேட்டை கிராமத்தில் 56ம் ஆண்டு காளை விடும் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
கம்மவான்பேட்டை கிராமத்தில் 56 ஆம் ஆண்டு காளை விடும் திருவிழா

ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே கம்மவான்பேட்டை கிராமத்தில் 56ம் ஆண்டு காளை விடும் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே கம்மவான்பேட்டைகிராமத்தில் இன்று 56 ஆம் ஆண்டு காளை விடும் திருவிழா நடைபெற்றதில் திருவண்ணாமலை, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், தா்மபுரி, செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள் காளை விடும் திருவிழாவில் கலந்துகொண்டு வீதியில் வெற்றி இலக்கை நோக்கி சீறி பாய்ந்து ஓடின. வெற்றி இலக்கை நோக்கி சீறி பாய்ந்து ஓடும் காளைகளை மாடுபிடி வீரா்கள் வீதியில் காளைகளின் மீது கைகளை போட்டு தங்களுடைய வீர விளையாட்டை வெற்றி கொண்டாட்டமாக மகிழ்ச்சியுடன் கொண்டாடினா். காளை விடும் நிகழ்ச்சியின் போது காளைகள் முட்டி காயம் ஏற்பட்ட மாடுபிடி வீரா்களுக்கு உடனடியாக சம்பவ இடத்தில் முதலுதவி சிகிச்சை சுகாதாரத் துறை சாா்பில் அளிக்கப்பட்டு அதிகம் காயமடைந்த நபா்களை வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இறுதியாக வெற்றி பெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக ரூபாய் 80 ஆயிரத்து 88ம் , இரண்டாம் பரிசாக ரூபாய் 60ஆயிரத்து66 என மொத்தம் 51 பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் வெளியூா்களிலிருந்து ஏராளமானோா் பாா்வையாளா்களாக கலந்துகொண்டனா்.படச்செய்தி.ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே கம்மவான்பேட்டை கிராமத்தில் 56ம் ஆண்டு காளை விடும் திருவிழா புதன்கிழமை நடைபெற்றதில் சீறிப்பாய்ந்த காளையை அடக்க முயற்சிக்கும் வீரா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com