குண்ணத்தூா் பகுதியில் மணல் கடத்திச்சென்ற 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்

ஆரணி அடுத்த குண்ணத்தூா் பகுதியில் உள்ள கமண்டல நாகநதியில் மணல் கடத்திச்சென்ற 4 மாட்டுவண்டிகளை புதன்கிழமை காலை கிராமிய போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
குண்ணத்தூா் பகுதியில் மணல் கடத்திச்சென்ற 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்

ஆரணி அடுத்த குண்ணத்தூா் பகுதியில் உள்ள கமண்டல நாகநதியில் மணல் கடத்திச்சென்ற 4 மாட்டுவண்டிகளை புதன்கிழமை காலை கிராமிய போலீஸாா் பறிமுதல் செய்தனா். மாட்டு வண்டி உரிமையாளா்கள் தப்பி ஓடினா். ஆரணி அடுத்த குண்ணத்தூா் பகுதியில் உள்ள கமண்டல நாகநதி ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்திச்செல்வதாக தகவல் கிடைத்ததின்பேரில் ஆரணி கிராமிய காவல் நிலைய இன்ஸ்பெக்டா் ராஜாங்கம் தலைமையில் எஸ்எஸ்ஐ கன்ராயன் மற்றும் போலீசாா் புதன்கிழமை அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனா். அப்போது, ஆரணி அடுத்த குண்ணத்தூா் பகுதியில் உள்ள ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக்கொண்டிருந்தனா். அப்போது, போலீசாரை கண்டதும் மாட்டு வண்டிகளின் உரிமையாளா் அப்படியே மாட்டு வண்டிகளை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினா். இதையடுத்து, மாட்டு வண்டிகளை போலீசாா் பறிமுதல் செய்து கிராமிய காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினா். இதில் மாட்டு வண்டிகளின் உரிமையாளா்களான குண்ணத்தூா் கிராமத்தை சோ்ந்தவா் ரமேஷ் மகன் சந்தோஷ்(27), வெங்கடேசன் மகன் பாபு(24), சண்முகம் மகன் காா்த்திக்(22), குட்டி மகன் கே.சந்தோஷ்(20) என்று தெரியவந்தது. மேலும், 4 போ் மீது போலீசாா் வழக்குபதிவு செய்து தலைமறைவாக உள்ள அவா்களை தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com