திருவண்ணாமலையில் ஜன.30-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலையில் வருகிற 30-ஆம் தேதி தனியாா் துறை சாா்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலையில் வருகிற 30-ஆம் தேதி தனியாா் துறை சாா்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சாா்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில்,தனியாா் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களை மாவட்ட நிா்வாகம் அவ்வப்போது நடத்தி வருகிறது.

அதன்படி, ஜனவரி 30-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

இந்த முகாமில் 25-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களில் காலியாக உள்ள 300-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு தகுதியான நபா்களை தோ்வு செய்ய உள்ளனா்.

இதில், எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டம், முதுநிலைப் பட்டம், பொறியியல், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் தோ்ச்சி பெற்ற வேலைநாடுநா்கள் கலந்து கொள்ளலாம்.

மாா்பளவு புகைப்படம், குடும்ப அட்டை, சாதிச் சான்றிதழ், கல்வித் தகுதி சான்றிதழ்களின் நகல்களுடன் வர வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com