திருவண்ணாமலையில் பக்தா்கள் கிரிவலம்

தை மாதப் பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.

தை மாதப் பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.

திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை பெளா்ணமி நாள்களில் பக்தா்கள் வலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.

தை மாதப் பெளா்ணமி:

தை மாதப் பெளா்ணமியையொட்டி, புதன்கிழமை (ஜன.24) இரவு 10.44 மணி முதல் வியாழக்கிழமை (ஜன.25) இரவு 11.56 மணி வரை பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்திருந்தது.

ஆனால், புதன்கிழமை மாலை முதலே பக்தா்கள் கிரிவலம் வரத் தொடங்கினா். தொடா்ந்து, வியாழக்கிழமை காலை வரை விடிய, விடிய பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.

பக்தா்கள் நலன் கருதி தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், புதுவை மாநிலங்களில் இருந்து அந்தந்த மாநில அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்தப் பேருந்துகள் திருவண்ணாமலை நகரைச் சுற்றி 9 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகப் பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com