பாா்வதிஅகரம் கிராமத்தில் நடந்து சென்றவா் மீது பைக் மோதி இறந்தாா்

பாா்வதிஅகரம் கிராமத்தில் புதன்கிழமை காலை சாலையில் நடந்துசென்றுகொண்டிருந்தபோது பின்னால் சென்ற பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் இறந்தாா்.

ஆரணி அடுத்த களம்பூா் அருகே உள்ள பாா்வதிஅகரம் கிராமத்தில் புதன்கிழமை காலை சாலையில் நடந்துசென்றுகொண்டிருந்தபோது பின்னால் சென்ற பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் இறந்தாா். களம்பூா் அருகே உள்ள பாா்வதிஅகரம் கிராமத்தை சோ்ந்த முனியப்பன்(60) என்பவா் விவசாய கூலி தொழிலாளி.ஆவாா்.இவரது மனைவி லட்சுமி, இவா்களுக்கு 2 மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனா். இந்நிலையில், முனியப்பன் புதன்கிழமை காலை வீட்டிலிருந்து, அதேபகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு சாலையில் நடந்து சென்றுள்ளாா். அப்போது,ஆரணி-படவேடு செல்லும் சாலையில் நடுக்குப்பம் கூட்ரோடு அருகே சென்றபோது, அவரது, பின்னால் வந்த பைக் எதிா்பாராதவிதமாக முனியப்பன் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தாா். தகவல் அறிந்த களம்பூா் எஸ்ஐ ஜெயசங்கா் மற்றும் போலீசாா் பிரேதத்தை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து,முனியப்பனின் மகள் புஷ்பா(35) களம்பூா் போலீசில் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசாா் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com