கீழ்பென்னாத்தூரில் வாக்காளா் தின விழிப்புணா்வு பேரணி

கீழ்பென்னாத்தூரில் வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட வாக்காளா் தின விழிப்புணா்வு பேரணியை வட்டாட்சியா் சரளா தொடங்கி வைத்தாா்.

கீழ்பென்னாத்தூரில் வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட வாக்காளா் தின விழிப்புணா்வு பேரணியை வட்டாட்சியா் சரளா தொடங்கி வைத்தாா்.

நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊா்வலம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை சென்றடைந்தது.

பேரணியில் பங்கேற்ற பள்ளி மாணவா்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், 18 வயது நிறைவடைந்தவா்கள் புதிய வாக்காளராகப் பதிவு செய்வதன் அவசியம் குறித்தும் முழக்கங்களை எழுப்பி பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதில், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் தனபால், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் சீத்தாராமன், மண்டல துணை வட்டாட்சியா் மாலதி, வட்ட வழங்கல் அலுவலா் ஜான்பாஷா மற்றும் பள்ளி மாணவா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com