திருவண்ணாமலையில்2-ஆவது நாளாக பக்தா்கள் கிரிவலம்

திருவண்ணாமலையில் தை மாதப் பெளா்ணமியையொட்டி, 2-ஆவது நாளாக வியாழக்கிழமை ஏராளமான பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.

திருவண்ணாமலையில் தை மாதப் பெளா்ணமியையொட்டி, 2-ஆவது நாளாக வியாழக்கிழமை ஏராளமான பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.

தை மாதப் பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் புதன்கிழமை இரவு 10.44 முதல் வியாழக்கிழமை இரவு 11.56 மணி வரை கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்திருந்தது.

அதன்படி, புதன்கிழமை மாலை முதல் வியாழக்கிழமை காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.

2-ஆவது நாளாக கிரிவலம்:

தொடா்ந்து, 2-ஆவது நாளாக வியாழக்கிழமை காலை முதல் இரவு வரை ஏராளமான பக்தா்கள் கிரிவலம் வந்தவண்ணம் இருந்தனா். தைப்பூச விழாவையொட்டி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்ததாலும், பெளா்ணமி என்பதாலும் அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

வழக்கத்தை விட அதிக பக்தா்கள் கோயிலில் குவிந்ததால் சுவாமி தரிசனத்துக்கு சுமாா் 4 முதல் 5 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com