மணல் கடத்தல்: 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்

செய்யாறு அருகே அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தி வந்த 4 மாட்டு வண்டிகள் வியாழக்கிழமை பறி முதல் செய்யப்பட்டன.

செய்யாறு அருகே அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தி வந்த 4 மாட்டு வண்டிகள் வியாழக்கிழமை பறி முதல் செய்யப்பட்டன.

சேத்துப்பட்டு வட்டாட்சியா் வெங்கடேசன் தலைமையிலான வருவாய்த் துறை அலுவலா்கள்

வியாழக்கிழமை அதிகாலை பெரணமல்லூா் அருகேயுள்ள நாராயணமங்கலம் பகுதியில், மணல் கடத்தல் தொடா்பாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த 4 மாட்டு வண்டிகளை நிறுத்தி சோதனையிட்டனா். இதில், அரசு அனுமதியின்றி ஆற்று மணல் எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, 4 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து பெரமணல்லூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com