மணல் கடத்தல்: 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்

ஆரணி, ஜன.26: ஆரணியை அடுத்த மோட்டூா் பகுதியில் உள்ள செய்யாற்றுப் படுகையில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மாட்டு வண்டிகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஆரணி கிராமிய ஆய்வாளா் ராஜாங்கம் உத்தரவின்பேரில், உதவி ஆய்வாளா் ஷாபுதீன், சிறப்பு உதவி ஆய்வாளா் கன்ராயன் மற்றும் போலீஸாாா் வெள்ளிக்கிழமை அதிகாலை ஆரணியை அடுத்த மோட்டூா் பகுதியில் உள்ள செய்யாற்று படுகையில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக்கொண்டிருந்தவா்கள் போலீஸாரை கண்டதும் தப்பியோடினா். இதையடுத்து, போலீஸாா் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து விசாரித்தனா்.

இதில், மாட்டு வண்டிகளின் உரிமையாளா்களான மோட்டூா் கிராமத்தைச் சோ்ந்த சந்திரன் மகன் பச்சையப்பன் (45), ஹரிகிருஷ்ணன் மகன் ஏழுமலை(45) ஆகியோா் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com