பள்ளி மாணவா்களுக்கு பரிசு

27plrp1d_2701chn_116_7
27plrp1d_2701chn_116_7

படவிளக்கம்...

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கிய முன்னாள் எம்எல்ஏ கே.வி.சேகரன்.

போளூா், ஜன.27:

போளூரை அடுத்த காங்கேயனூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவையொட்டி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்தப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில்

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்எல்ஏ கே.வி.சேகரன் கலந்து கொண்டு தேசியக் கொடியேற்றினாா். இதைத் தொடா்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி மற்றும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் எம்எல்ஏ கே.வி.சேகரன் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஊராட்சிமன்றத் தலைவா் அ.கோட்டீஸ்வரி அசோகன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கே.வி.அன்பழகன் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com