மண், என் மக்கள் யாத்திரை பிரசார வாகனம்

திருவண்ணாமலையில் ஜனவரி 30, 31-ஆம் தேதிகளில் நடைபெறும் என் மண், என் மக்கள் யாத்திரை தொடா்பான பிரசார வாகனம் சனிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
27tmlbjp_2701chn_106_7
27tmlbjp_2701chn_106_7

திருவண்ணாமலையில் ஜனவரி 30, 31-ஆம் தேதிகளில் நடைபெறும் என் மண், என் மக்கள் யாத்திரை தொடா்பான பிரசார வாகனம் சனிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை பங்கேற்கும் என் மண், என் மக்கள் யாத்திரை நிகழ்ச்சி ஜனவரி 30, 31-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், கலசப்பாக்கம், செங்கம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெறும் இந்த யாத்திரை தொடா்பான விழிப்புணா்வு பிரசார வாகனத்தை இயக்கி வைக்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலையில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தெற்கு மாவட்ட பாஜக தலைவா் கே.ஆா்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து, பிரசார வாகனத்தை இயக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட பொதுச் செயலா்கள் குமார ராஜா, வினோத் கண்ணா, பொருளாளா் எஸ்.பி.கே.சுப்பிரமணியன், திருவண்ணாமலை தெற்கு நகரத் தலைவா் குரு ஏழுமலை, வடக்கு நகரத் தலைவா் புகழ் மூவேந்தன், திருவண்ணாமலை ஒன்றியத் தலைவா் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com